பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் 'நம்பர்-3' சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா 4 வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் பலப்பரீட்சை நடத்தினர். இதன் முதல் செட்டை 6-2 எனக் அபாரமாக கைப்பற்றினார் நடால்.

French Open: 'King of Clay' Rafael Nadal wins record 10th title

இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்திய நடால், 3வது செட்டை 6-1 என வென்றார். முடிவில் நடால் 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 10வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வென்ற 15வது பட்டம் இதுவாகும்.

முன்னதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் ரபேல் நடால், 6-ம் நிலை வீரரான டொமினிக் தியெம்-ஐ எதிர்கொண்டு .
6-3, 6-4, 6-0 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
'King of Clay' Rafael Nadal bagged his record 10th French Open title as he defeated thrid-seeded Stanislas Wawrinka in the final at Roland Garros.
Please Wait while comments are loading...