For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெயிலின் சாதனைகளை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும்.. அது!

By Staff

டாக்கா: ஆர்.கே. நகர் தொகுதிக்கு எத்தனை முறை தேர்தல் நடத்தினாலும் அதில் ஹீரோ அத்தொகுதி வாக்காளர்கள் தான். அதுபோல, டி-20 கிரிக்கெட் போட்டி என்றாலே, அது கிறிஸ் கெயில் கிரிக்கெட் என்றாகி விட்டது.

வெஸ்ட் இன்டீஸ், ஐபிஎல், பங்களாகேஷ் பிரீமியர் லீக் என டி-20 போட்டி என்றால், அதில் கிறிஸ் கெயிலின் முத்திரை கண்டிப்பாக மிகவும் ஆழமாக பதிக்கப்பட்டிருக்கும்.

6 அடி 4 அங்குல உயரமுள்ள கிறிஸ் கெயில், பேட்டை சும்மா வைத்து கொண்டிருந்தாலும் பந்து அதில் பட்டு சிக்சருக்கு போகும் அளவு ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர். கிறிஸ் கெயில் டி-20 போட்டிகளில் செய்துள்ள சாதனைகளை அவர் மட்டுமே முறியடிக்க முடியும் நிலை தற்போது உள்ளது.

வங்கதேத்தில் பிபிஎல்

வங்கதேத்தில் பிபிஎல்

நம்மூர் ஐபிஎல் போல, வங்கதேத்தில் பிபிஎல் எனப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் நடக்கின்றன. இதில் அவர் விளையாடும் ரங்க்புர் ரைடர்ஸ் அணி, நேற்று கோப்பையை வென்றது. பைனல்ஸில் மட்டும் கெயில் விளையாடிய ருத்ரதாண்டவத்தை பார்ப்போம்.

டீம் ஸ்கோர் 206, கெயில் 146

டீம் ஸ்கோர் 206, கெயில் 146

டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிரான பைனல்சில் ரங்க்புர் ரைடர்ஸ், 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 206 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயிலின் ஸ்கோர், 146 ரன்கள். எதிரணி 149 ரன்களுக்கு சுருண்டது.

சிக்சரில் சாதனை

சிக்சரில் சாதனை

கிறிஸ் கெயில் 69 பந்துகளில், 146 ரன்கள் எடுத்தார். இதில், 18 சிக்சர்கள் அடங்கும். டி-20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள். 17 சிக்சர்கள் என்ற தனது சாதனையை கெயில் முறியடித்தார்.

நெருங்க முடியாது

நெருங்க முடியாது

டி-20ல் தனது 20வது சதத்தை அவர் அடித்தார். டி-20ல் அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் கிளிங்கர், இங்கிலாந்தின் ரைட், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோர் தலா 7 சதம் அடித்துள்ளனர்.

முறிக்க முடியாத சாதனைகள்

முறிக்க முடியாத சாதனைகள்

அடுத்ததாக டி-20 11 ஆயிரம் ரன்களை அவர் எட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள மெக்கல்லம், 8 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளில், 5 சதங்கள், 100 சிக்சர்கள் என்று கெயிலின் சாதனைகள் தொடர்கின்றன.

கெயிலின் சாதனைகளை இனி கெயிலால் மட்டுமே முறியடிக்க முடியும்.

Story first published: Wednesday, December 13, 2017, 20:21 [IST]
Other articles published on Dec 13, 2017
English summary
Chris Gayle shatters records in T-20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X