அமெரிக்காவை கொலம்பியா வென்றதால், கானாவுக்கு வாய்ப்பு

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியாவை கானா வென்ற நிலையில், அமெரிக்காவை கொலம்பியா வென்றதால், அந்த மூன்று அணிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. இதில் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், வெளியேறியது. இந்த நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொலம்பியா 3-1 என்ற கோல்கணக்கில் அமெரி்க்காவை வென்றது.

3 teams qualified

இதன் மூலம் அமெரிக்கா, கொலம்பியா, கானா ஆகியவை தலா 2 போட்டிகளில் வென்றுள்ளன. இதன் மூலம் மூன்று அணிகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

6 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுடன், 6 பிரிவுகளிலும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் அடுத்தகட்ட நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், இந்த மூன்று அணிகளும் முன்னேறின.

பி பிரிவில் நேற்று இரவு நடந்த ஆட்டங்களில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியையும், மாலி 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்தையும் வென்றன. இதில் பராகுவே, மாலி ஆகியவை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று நடக்கும் ஆட்டங்களில் சி பிரிவில் கோஸ்டாரிகா – ஈரான், குய்னா – ஜெர்மனி மோதுகின்றன. டி பிரிவுில் ஸ்பெயின் – வடகொரியா, நைஜர் – பிரேசில் மோதுகின்றன.

நாளையுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
With Colombia beat USA, Ghana qualified for next round
Please Wait while comments are loading...