கிரிக்கெட்ல தோத்தா என்ன ஹாக்கில பாகிஸ்தான பீட் பண்ணிட்டோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதேநேரத்தில் உலக ஹாக்கி லீக் அரையிறுதி லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய ஹாக்கி அணி அபாரமாக வீழ்த்தியுள்ளது.

உலக ஹாக்கி அரை இறுதி லீக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

இப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Hockey World League: India beats Pakistan

இந்திய அணியின் 2வது வெற்றி

அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவை எதிர்கொண்டது. இதில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

முதல்பாதியில் 3

அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் எதிரி நாடான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய அணி. ஆட்டத்தின் முதல் பாதியில் 3 கோல் அடித்தது.

7-1 என்ற கோல் கணக்கில்

இந்தியாவின் டால்விந்தர், ஹர்மான்பிரித் ஆகியோர் தலா 2 கோல் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடைசி லீக்கில் நெதர்லாந்து

இதையடுத்து இந்தியா வரும் 20ம் தேதி கடைசி லீக் அரை இறுதி தொடரின் காலிறுதி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பைனலில் இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதின.

அதுல விட்டாலும் இதுல பிடிச்சுட்டோம்ல

இதில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி பைனல் மேட்ச் வரை வந்த பாகிஸ்தான் கோப்பையை தட்டிச்சென்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி அணி லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hockey World League: India beats Pakistan. Penalty corner specialist Harmanpreet Singh and forwards Talwinder Singh and Akashdeep Singh scored a brace apiece as India flayed Pakistan 7-1 in a Pool B clash to storm into the quarter-finals of the Hockey World League (HWL) Semi Final here on Sunday (June 18).
Please Wait while comments are loading...