உலக ஹாக்கி லீக்.. கனடாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்று தொடரில் இந்திய அணி, கனடா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்று தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது 2வது லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது.

Hockey World League: India crush Canada 3-0 ahead of Pakistan clash

ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எஸ்.வி சுனில், ஆகாஷ்தீப் சிங், சர்தார் சிங் ஆகியோர் முதல் பாதியிலேயே தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. கனடா அணி இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நாளை நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன், இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி நடக்கும் போட்டியில், நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோத உள்ளது. முன்னதாக முதல் போட்டியில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India put up an impressive first-half display to dismantle Canada 3-0 for their second consecutive victory in the Hockey World League (HWL) Semi Final Pool B here on Saturday (Juen 17).
Please Wait while comments are loading...