For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ஹாக்கி அரையிறுதி போட்டி... கனடாவிடம் தோல்வி - 6வது இடத்தில் இந்தியா!

By Lakshmi Priya

லண்டன்: உலக ஹாக்கி அரை இறுதி போட்டியில் 5 மற்றும் 6-ஆவது இடத்திற்கான பிளே ஆப் சுற்றில் கனடாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

உலக ஹாக்கி அரை இறுதி போட்டியில் 5 முதல் 8 இடங்களுக்கான பிளே ஆப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வெற்றி கண்டது.

Hockey World League: India go down 2-3 against Canada to finish 6th

இந்நிலையில் இந்தியாவும், கனடாவும் 5 மற்றும் 6-ஆவது இடங்களுக்கான போட்டியில் இன்று மோதின. இதில் 2-3 என்ற கோல் கணக்கில் கனடாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

ஹர்மன்ப்ரீத் சிங் 22-ஆவது நிமிடத்தில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார்.ஆனால் அதைத் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்களை இந்தியா நழுவ விட்டது. இரண்டாவது பாதியில் கனடா சிறப்பாக விளையாடியது.

கனடாவின் கீகன் பெரீரா 39-ஆவது நிமிடத்தில் இந்தியாவுடன் சம கோல்களை அடித்தார். அதைத் தொடர்ந்து கார்டன் ஜான்ஸ்டன் 3-ஆவது கோலை போட்டு வெற்றி கண்டார். இதனால் இந்தியாவுக்கும், கனடாவுக்குமான 5,6 இடத்துக்கான பிளே ஆப் போட்டியில் கனடா 5-ஆவது இடத்துக்கு சென்றது.

Story first published: Sunday, June 25, 2017, 18:38 [IST]
Other articles published on Jun 25, 2017
English summary
Indian Hockey team went down 2-3 against a much weaker Canada to finish 6th in the 8 teams Hockey World League semifinals today (June 25). Canada took an early lead but India were quick to respond. Harmanpreet Singh converted a penalty corner to restore parity.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X