இருந்த இடத்திலிருந்து உலகக் கோப்பைப் போட்டிகள் குறித்து அறிய புதிய "ஆப்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரிலையன்ஸ் கம்யூனிகேஷனோடு இணைந்து ஐசிசி தயாரித்த புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஐசிசி உலகக்கோப்பை 2015 தொடர்பானது.

அடுத்த மாதம் 14ம் தேதி ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில் 14 அணிகள் இடம் பெறுகின்றன.

இந்நிலையில், புதிய அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளது ஐசிசி. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள இயலும்.

ICC launches official World Cup 2015 App

அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே மூலம் இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள மைதானத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த தகவல்களைப் பெற முடியும். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் மூலம் இதைப் பெறலாம்.

போட்டிகளை முழுமையாக ரசிக்க இந்த ஆப் உதவியாக இருக்கும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The International Cricket Council (ICC), in partnership with Reliance Communications, today launched the official ICC Cricket World Cup 2015 app.
Please Wait while comments are loading...