For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுமார் மூஞ்சிக் குமாருக்கு, ரொம்ப சுமார் மூஞ்சிக் குமார் சொல்லும் அட்வைஸைக் கேளுங்கப்பா...!

செளதாம்ப்டன்: 3வது டெஸ்ட் போட்டியும் முடியப் போகிறது. இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியாகவும் இல்லை. இந்த நிலையில் விராத் கோஹ்லி, இந்திய அணி வீரர்கள் 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் தங்களது "கேரக்டரை" கொஞ்சமாவது காட்டும் வகையில் ஆட வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விராத் கோஹ்லி சரியாகவே ஆடவில்லை. டக் அவுட் எல்லாம் ஆனார். 3வது டெஸ்ட் போட்டியிலும் இதே நிலைதான்.

அதேசமயம், காதலி அனுஷ்காவுடன் லண்டனில் நன்றாகப் பொழுதைக் கழிக்கிறார் என்று செய்திகள் வேறு வந்தன. அது எப்படியோ போகட்டும்.. ஆனால் இதுவரை சரியாக ஆடாத கோஹ்லி, இந்திய அணி தனது 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் கொஞ்சமாவது தனது கேரக்டரைக் காட்டும் வகையில் ஆட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் கோஹ்லி.

தட்டுத் தடுமாறும் இந்தியா

தட்டுத் தடுமாறும் இந்தியா

முதல் இரண்டு டெஸ்ட்டுகளில் சந்திக்காத அளவில் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் சவாலை சந்தித்துள்ளது இந்தியா. கடுமையாக போராடி வருகிறது.

445 ரன்களைத் துரத்தி

445 ரன்களைத் துரத்தி

இங்கிலாந்தின் 445 என்ற பெரிய ஸ்கோரை துரத்திக் கொண்டுள்ளது இந்தியா. இன்றுதான் ஆட்டத்தின் கடைசி நாள். எனவே போட்டி விறுவிறுப்பாகியுள்ளது.

கையில் இருப்பது 6 விக்கெட்தான்

கையில் இருப்பது 6 விக்கெட்தான்

தற்போது இந்தியா 4 விக்கெட்களை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. கையில் இருப்பது 6 விக்கெட்கள்தான்.

வெல்வது கஷ்டம்... டிரா ரொம்பக் கஷ்டம்

வெல்வது கஷ்டம்... டிரா ரொம்பக் கஷ்டம்

நிச்சயம் இந்தியாவால் வெற்றி பெற முடியாது. கஷ்டமான காரியம் அது. அபாரமான ஆட்டத்தைக் காட்டினால்தான் உண்டு. அதேசமயம், டிராவுக்கு முயற்சிக்கலாம் என்றால் அதுவும் கூட சிரமமாக மாறியுள்ளது. எனவே இந்தியா பெரும் இக்கட்டில் உள்ளது.

ஆண்டர்சன் - மொயீன் அலி

ஆண்டர்சன் - மொயீன் அலி

ஒரு பக்கம் ஜேம்ஸ் ஆண்டர்சன் அச்சுறுத்துகிறார். மறுபுறம் மொயீன் அலியின் பந்து வீச்சும் பயமுறுத்துகிறது. இதைச் சமாளித்து கரையேறுவது மிகவும் கடினம்தான்.

சமாளிப்போம்.. நம்புவோம்

சமாளிப்போம்.. நம்புவோம்

இந்த நிலையில் விராத் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், நாம் நமது கேரக்டரை காட்ட வேண்டும். அதுதான் முக்கியம். நிச்சயம் அதை நாம் செய்ய முடியும். தொடரை வெல்ல வேண்டும் என்றால் இதுபோன்ற சவாலையும் நாம் சந்தித்தாக வேண்டும். நிச்சயம் அனைவரும் ஒருங்கிணைந்தால் வெல்லலாம், சாதிக்கலாம்.

பந்து திரும்பும்

பந்து திரும்பும்

கடைசி நாளில் பந்து திரும்பும் வாய்ப்புள்ளது. ஆனால் அவர்களிடம் நம்மைப் போல நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. எனவே நம்பிக்கையுடன் நாம் பந்துகளைச் சந்திக்க வேண்டும். அதேசமயம் மொயீன் அலி இருக்கிறார். அவரைச் சமாளிப்பதுதான் கஷ்டமானது. இருந்தாலும் நாம் போராட வேண்டும்.

முதல்ல நானே சரியில்லை

முதல்ல நானே சரியில்லை

நானும் கூட இந்தத் தொடரில் சில தவறுகளைச் செய்துள்ளேன். அதேசமயம் எப்போதும் பர்பெக்ட்டாக இருக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது என்றார் கோஹ்லி.

Story first published: Thursday, July 31, 2014, 14:52 [IST]
Other articles published on Jul 31, 2014
English summary
Indian VC Virat Kohli has urged the Indian team to stand up on the final day of the third Test against England and show some character.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X