ஆசியக் கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்திய மகளிர்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜப்பானில் நடந்து வரும் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் மலேசியாbw 2–0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி ஏற்கனவே உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

India enters quarters

8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை 10–0 என்ற கோல் கணக்கிலும், அடுத்ததாக சீனாவை 4–1 என்ற கோல் கணக்கிலும் வென்றது.

நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மலேசியாவை 2–0 என்று இந்திய மகளிர் அணி சுலபமாகவென்றது. இதன் மூலம், தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வென்று, ஏ பிரிவில் முதலிடம் பிடித்து, காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறியது.

நாளை நடக்கும் காலிறுதியில் கஜகஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜப்பான் – மலேசியா, சீனா – தாய்லாந்து, தென்கொரியா – சிங்கப்பூர் அணிகள் மோத உள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India enters the Womens’ Asia cup Hockey Quarters
Please Wait while comments are loading...