ஆசியக் கோப்பை ஹாக்கி 8வது முறையாக அரை இறுதியில் இந்திய பெண்கள்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜப்பானில் நடந்து வரும் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியது. காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. அரை இறுதியில், ஜப்பான் அணியை சந்திக்கிறது.

பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை 10–0 என்ற கோல் கணக்கிலும், அடுத்ததாக சீனாவை 4–1 என்ற கோல் கணக்கிலும் மலேசியாவை 2–0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.

India looking for second Asia cup

லீக் பிரிவில் மூன்று ஆட்டங்களில் வென்று, ஏ பிரிவில் முதலிடம் பிடித்து, காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறியது. நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சுலபமாக வென்றது.

இந்திய மகளிர் அணி 2004ல் ஆசியக் கோப்பையை வென்றது. அதன்பிறகு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து எட்டாவது முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ள இந்திய அணி, அரை இறுதியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதியில் சீனாவும் தென்கொரியாவும் மோதுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Women hockey team enters semi finals in Asia cup
Please Wait while comments are loading...