இந்தோனேஷிய பேட்மிண்டன் போட்டி... சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜகர்தா : இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

மொத்தம் ஆறரை கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்தது. முதல் பிரிவு ஆட்டங்களில் வென்று அரையிறுதியில் வென்ற உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் கசுமசா கசாயும், உலகத் தரவரிசையில் பேட்மிண்டன் போட்டியில் 22வது இடம் வகிக்கும் ஸ்ரீகாந்தும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் மோதினர்.

India's Srikanth beats Kazumasa Sakai to win Indonesian Open

சூப்பர் சீரிஸ் போட்டியில் 4வது முறையாக இறுதிச் சுற்று ஆட்டத்தில் நுழைந்த ஸ்ரீகாந்த் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் 21-11 என்ற செட்டில் முதல் போட்டியையும், இரண்டாவது போட்டியில் சற்று போராடி 21-19 என்ற நேர்செட்டுகளில் கசுமசா கசாயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian badminton player Srikanth wins men's single championship at Indonesia super series badminton.
Please Wait while comments are loading...