உலக ஹாக்கி லீக்: இந்தியாவிடம் மீண்டும் படுதோல்வியடைந்த பாகிஸ்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக ஹாக்கி லீக் சுற்றில் பாகிஸ்தானை மீண்டும் இந்தியா அபாரமாக வென்று அசத்தியுள்ளது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை காலிறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வியடைந்தது.

India thrash Pakistan 6-1 in Hockey World League

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் உள்ள மலேசிய அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மலேசிய அணி அரை இறுதிக்கு முன்னேறியதால் இந்தியா அந்த வாய்ப்பை தவற விட்டது.

இந்நிலையில் 5 முதல் 8வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. ஏற்கனவே 18ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியிருந்தது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய அணி தனது ஆதிக்கத்தை பாகிஸ்தான் மீது நிலைநிறுத்தி அதை அடக்கி ஒடுக்கியது. 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக 5 மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில் கனடாவை எதிர்கொள்ள உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India thrash Pakistan 6-1 in Hockey World League 5th-8th place match
Please Wait while comments are loading...