பாகிஸ்தானை புரட்டி எடுத்து வெற்றி பெற்றது இந்தியா.. உலக ஹாக்கி லீக்கில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலக ஹாக்கி லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

India thrash Pakistan 7-1 in Hockey

அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதியது இந்தியா. இதில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது இந்தியா. ஹர்மன்ப்ரீத் 13 மற்றும் 33வது நிமிடங்களிலும், தல்விந்தர் 21 மற்றும் 24வது நிமிடங்களிலும், அக்ஷதீப் சிங் 47 மற்றும் 58வது நிமிடங்களிலும் தலா 2 கோல்களை போட்டனர். பர்தீப் மோர் 49வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

20ம் தேதி கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hockey World League, India thrash Pakistan 7-1
Please Wait while comments are loading...