இந்திய கால்பந்துக்கு புதிய துவக்கம்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியை சந்தித்து வெளியேறினாலும், இது இந்திய கால்பந்துக்கு புதிய துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. முதல் முறையாக போட்டியை நடத்துவதுடன், முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து.

New hope for India

மிகவும் வலுவான அமெரிக்கா, கொலம்பியா, கானா அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றது.

அமெரிக்காவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், கொலம்பியாவுக்கு எதிராக ஆட்டத்தில் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் கோலை ஜியாக்சன் சிங் பதிவு செய்தார். அந்த ஆட்டத்தில் 2-1 என்ற வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்தில் கானாவை சந்தித்தது. மிகவும் சவாலான இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

உலகக் கோப்பையை நடத்தும் அணி என்ற வகையில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. அதே நேரத்தில் மற்ற 23 அணிகள், பல்வேறு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, இந்தியா வந்தன. இதில் நியூ காலடோனியா, நைஜர் ஆகியவையும் முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.

இந்தியாவில் மேற்கு வங்கம், கோவா, கேரளா என சில மாநிலங்களில் கால்பந்து மிகவும் பிரபலமாக இருந்தாலும், மிகப் பெரிய அளவில் சோபிக்கும் வகையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்தியா, தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெளிப்படுத்திய தடுப்பாட்ட திறமை, சர்வதேச அளவிலான மிகப் பெரிய போட்டிகளில் விளையாடும் தகுதி தங்களுக்கு உள்ளது என்பதை காட்டியுள்ளது.

இந்த நேரத்தில் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட சீனியர் அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிட வேண்டும்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் தோல்விகள் அடைந்தாலும், ஐ.எம். விஜயன், பாய்சுங் பூட்டியா, சுனில் சேத்ரி போன்ற வீரர்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி ஒரு முதலீடாகும். அதன் பலன் எதிர்காலத்தில் கிடைக்கும்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு ஒரு சபாஷ்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian journey in the FIFA U17 world cup ends with loss to Ghana
Please Wait while comments are loading...