கேல் ரத்னா விருது மிதாலி ராஜுக்குக் கிடைக்காமல் போக யார் காரணம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜை பரிந்துரைக்காமல் பிசிசிஐ புறக்கணித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் மவசு இருந்ததில்லை. ஆனால் சமீப காலமாக மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியால் பெண்கள் கிரிக்கெட்டும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை தொடரின்போது பிரிஸ்டலில் நடைபெற்ற 23-ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் 6000 ரன்களை குவித்து மிதாலி ராஜ் உலக சாதனை படைத்தார்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்துள்ளார்.

இறுதி போட்டி வரை முன்னெடுத்து....

இறுதி போட்டி வரை முன்னெடுத்து....

தொடர்ந்து 7 அரை சதங்களை கடந்தவர் என்ற பெருமையும் உண்டு, அதேபோல் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 8 ரன்களில் தோல்வியை தழுவியது இந்திய அணி. எனினும் இறுதி போட்டி வரை இந்திய அணியை முன்னெடுத்து சென்றதற்கு மிதாலியும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறந்து விட முடியாது.

கேல் ரத்னா விருதுக்கு...

கேல் ரத்னா விருதுக்கு...

ஹர்மன்பிரீத் கௌர், புஜாரா ஆகியேரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்தது. எனினும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க காலக்கெடு ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் அந்த காலகட்டத்துக்கு பிறகு சாதனை படைத்த மிதாலி ராஜை அந்த விருதுக்கு பரிந்துரைக்க முடியவில்லை என்று பிசிசிஐ கூறுகிறது.

கடந்த கால உதாரணங்கள்

கடந்த கால உதாரணங்கள்

பரிந்துரைக்க வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னர் சாதனை படைத்த வீரர்களின் பெயர்கள் முந்தைய காலங்களிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன. அதுபோல் மிதாலியின் பெயரையும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலின் தலையீட்டின்படி மிதாலியின் பெயரை பரிந்துரைத்திருக்கலாம். மிதாலியின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய பிசிசிஐ சூழ்ச்சி செய்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

We have areas to work on says captain Mithali Raj-Oneindia Tamil
பிசிசிஐ புறக்கணிப்பு

பிசிசிஐ புறக்கணிப்பு

காலக்கெடுவுக்கு பின்னர் சாதனை படைத்தவர்களின் பெயர்களை விருதுக்கு பரிந்துரைத்திருப்பது என்ற கடந்த கால அனுபவங்கள் பிசிசிஐயின் ஒரு உறுப்பினருக்குக் கூட தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது தங்கள் மீது ஏற்படும் பழியை கழித்திருக்கலாம். ஆனால் அது செய்யவில்லை. தற்போதுதாவது பிசிசிஐ தனது தவறை உணருமா. விருது, பதக்கம் என்பது வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். ஒருவரது திறமையை அங்கீகரிக்க வழங்கப்படும் விருதுகள் இதுபோன்ற வாரியத்தின் மெத்தனபோக்கால் திறமைசாலிகளுக்கு கிடைக்காமல் போகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Board of Control for Cricket in India (BCCI) has failed to send the name of skipper Mithali Raj for the prestigious Rajiv Gandhi Khel Ratna award in time.
Please Wait while comments are loading...