சென்னை சூப்பர் கிங்ஸை வாங்குகிறார் வருண் மணியன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொழிலதிபரும் த்ரிஷாவின் வருங்கால வருண் மணியன் வாங்கப் போவதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்துள்ளன.

கட்டுமானத் துறையில் காலூன்றிய வருண் மணியன், இப்போது திரைப்படங்கள் தயாரிப்பதிலும் மும்முரம் காட்டுகிறார். வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களைத் தயாரித்தவர், மேலும் சில படங்களைத் தயாரித்து வருகிறார்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவை திருமணம் செய்த பிறகு, படத் தயாரிப்புப் பொறுப்பை அவர் வசம் விடப் போகிறார் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில், பிசிசிஐ தலைவராக உள்ள சீனிவாசன் வசம் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நீதிமன்ற உத்தரவு காரணமாக விற்பனைக்கு வருகிறது. சீனிவாசனின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்தான் வருண் மணியன்.

போட்டி

போட்டி

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க அவர் முயன்று வருகிறார். முன்னணி நடிகையைத் திருமணம் செய்வதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக அவரை ஆக்கவும் திட்டமிட்டுள்ளாராம். இன்னொரு பக்கம் இந்த போட்டியில் பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப்பும் களத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல்லில் நடிகைகள்

ஐபிஎல்லில் நடிகைகள்

ஏற்கெனவே ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்றவர்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக, இணை உரிமையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to sources, the real estate tycoon with interests in cinema, Varun Manian is buying the Chennai Super King IPL franchise from the beleaguered India Cements headed by N Srinivasan.
Please Wait while comments are loading...