For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஒரே நாளில் தங்கம், வெள்ளி, உலகசாதனை என இந்திய வீரர்கள் அசத்தல்!!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது.
 

By Kalai Mathi

டெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜித்து ராய் தங்கப்பதக்கத்தையும் அமன்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றுள்ளனர். அதேநேரத்தில் இந்திய வீரர் ஜித்து ராய் உலக சாதனையும் படைதுள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா ஏற்கனவே தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.

ISSF world cup : two more medals for india

இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்களை வென்றுள்ளது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜிதுராய் தங்கப் பதக்கத்தையும், அமன்பிரீத் சிங் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 230.1 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ஜிதுராய் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

Story first published: Wednesday, March 1, 2017, 16:03 [IST]
Other articles published on Mar 1, 2017
English summary
Jitu rai wins gold in 50m rifle competition. Aman preeth singh wins silver medal. India has won six medals till now in the International Shooting Sports Federation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X