ராணுவ வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்: கம்பீர் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது ராணுவ வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும், பதிலடியாக நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களை சிலர் சூழ்ந்துகொண்டு தாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

 J&K belongs to us, those who want azadi can leave: Gautam Gambhir

இந்த வீடியோ குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், நமது ராணுவ வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும், பதிலடியாக நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்; காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. ஆசாத் காஷ்மீர் வேண்டும் என்று நினைப்பவர்கள் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது வீரர்களை இதுபோன்று நடத்தக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jammu and Kashmir belongs to us. Whoever wants azadi (freedom) can leave now," is what ace cricketer, Gautam Gambhir had to say. Gambhir took to his Twitter account to say that Anti-Indians have forgotten that our flag also stands for saffron-fire of our anger, white, shroud for jihadis, green-hatred for terror.
Please Wait while comments are loading...