For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: ஆல் ரவுண்டர் ஜாக் கல்லீஸ் அறிவிப்பு

By Veera Kumar

துபாய்: அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் கல்லீஸ் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜாக் கல்லீஸ், உலக தரமுள்ள பேட்ஸ்மேனாகவும், வேகப்பந்து வீச்சாளராகவும், இரண்டிலும் ஒரே நேரத்தில் ஜொலித்தவர். உலக கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் எப்போதும் கல்லீஸ் முன்னணியில் இருப்பார்.

19 வருட அனுபவம்

19 வருட அனுபவம்

கல்லீஸ் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகள், 328 ஒருநாள் போட்டிகள், 25 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து 19 வருட காலம் அவர் கிரிக்கெட் ஆடியுள்ளார்.

பேட்டிங், பவுலிங்கில் கிங்

பேட்டிங், பவுலிங்கில் கிங்

டெஸ்ட் போட்டிகளில் 13 ஆயிரத்து 289 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 11,579 ரன்கள், டி-20 போட்டிகளில் 666 ரன்கள் குவித்துள்ள கல்லீஸ், தன்னை ஒரு முன்னணி பேட்ஸ்மேன் என நிரூபித்துள்ளார். அதேபோல டெஸ்ட்டில் 292, ஒருநாள் போட்டிகளில் 273, டி-20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக களம்

இங்கிலாந்துக்கு எதிராக களம்

1995ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில், கல்லீஸ் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்தார். ஒரு மாத காலம் கழித்து, ஒருநாள் போட்டியிலும் களம் கண்டார்.

டெஸ்ட்டிலிருந்து கடந்தாண்டு ஓய்வு

டெஸ்ட்டிலிருந்து கடந்தாண்டு ஓய்வு

2013ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கல்லீஸ் அறிவித்திருந்த நிலையில், திடீரென, தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இலங்கையுடன் மோசமான பேட்டிங்

இலங்கையுடன் மோசமான பேட்டிங்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன் குவிக்க திணறிய கல்லீஸ் உடனடியாக ஓய்வு முடிவையும் அறிவித்துவிட்டார்.

உலக கோப்பைவரை முடியாது

உலக கோப்பைவரை முடியாது

இதுகுறித்து கல்லீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "உலக கோப்பை தொடர் வரை தென் ஆப்பிரிக்க அணியில் நீடிக்க வேண்டும் என்ற எனது திட்டத்தை, இலங்கை சுற்றுப்பயண அனுபவம் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது. எனவே உடனடியாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுக்காக விளையாடுவார்

கொல்கத்தாவுக்காக விளையாடுவார்

அதே நேரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிட்னி தண்டர்ஸ் போன்ற உள்ளூர் அணிகளுடன் கல்லீஸ் போட்டுள்ள ஒப்பந்தப்படி தொடர்ந்து அவ்விரு அணிகளுக்காகவும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் இந்தாண்டு சீசனில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல கல்லீஸ் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 31, 2014, 13:25 [IST]
Other articles published on Jul 31, 2014
English summary
Veteran South Africa cricketer Jacques Kallis on Wednesday announced his retirement from all formats of cricket. He had previously retired from Test cricket after the series against India in December 2013.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X