ஓடும் ரயில் முன்பு குதித்து தேசிய ஹாக்கி வீராங்கனை தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரேவாரி: ஹரியானாவில் தேசிய ஹாக்கி வீராங்கனை ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டை சேர்ந்தவர் ஜோதி குப்தா(20). ஹாக்கி வீராங்கனை. தேசிய மகளிர் ஹாக்கி அணியில் இருந்த அவர் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று அனைவராலும் கூறப்பட்டார்.

Jyoti Gupta, a young hockey star found dead

இந்நிலையில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ரேவாரி ரயில் நிலையம் அருகே வந்த சன்டிகர்-ஜெய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு சென்றுள்ளார் ஜோதி.

ஜோதியை பார்த்த டிரைவர் பிரேக் போடுவதற்கு முன்பு ரயில் அவர் மீது மோதிவிட்டது. உடனே டிரைவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ஜோதி தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகிறார்கள். இரவு 10.30 மணி அளவில் ஜோதியின் செல்போனுக்கு அவரது தாய் கால் செய்தார். எடுத்துப் பேசிய போலீசார் ஜோதி இறந்த தகவலை தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ சான்றிதழ்களில் சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு ரோதக் சென்ற ஜோதி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jyoti Gupta, a 20-year-old hockey player was found dead on railway tracks in Haryana. She stood before a speeding train on wednesday.
Please Wait while comments are loading...