உலக கோப்பை கபடி: இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி #KabadiWorldCup

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆமதாபாத்: உலகக் கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை 69-18 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3வது உலககோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

Kabaddi World Cup: India beat England 69-18

தென்கொரியா, வங்காள தேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏ பிரிவில் நடைபெற்ற இந்த கடைசி லீக் ஆட்டத்தில்

தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இங்கிலாந்தை 69-18 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தியது இந்தியா. 20 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kabaddi World Cup: Indian Kabaddi team for qualifying for the semi-finals in the Kabaddi World Cup.
Please Wait while comments are loading...