மகனுடன் "செஸ்" விளையாடிய கைப்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் முகம்மது கைப் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போல போட்ட புகைப்படத்தை வைத்து சிலர் சர்ச்சையாக்கி விட்டனர்.

செஸ் விளையாட்டு இஸ்லாமில் தடை செய்யப்பட்டது. அதை கைப் விளையாடக் கூடாது. இனிமேல் விளையாட வேண்டாம் என ஒருவர் கைப் பேஸ்புக்கில் கமெண்ட் போட அதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் வெடித்து அனலைக் கூட்டி விட்டன.

முகம்மது கைப் முன்பு சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற படத்தைப் போட்டபோதும் இதேபோல விவாதம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மகனுடன் செஸ்

மகனுடன் செஸ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைப் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் போட்டிருந்தார். இதற்கு பதான் ஆசிப் கான் என்பவர் ஒரு கருத்து போட்டிருந்தார்.

விளையாடாதீங்க சார்

அதில், செஸ் விளையாட்டு இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது. நானும் கூட செஸ் வீரர்தான். ஆனால் அது தடை செய்யப்பட்டுள்ளதாக படித்த பின்னர் விளையாடுவதை நிறுத்தி விட்டேன் முகம்மது கைப் சார் என்று மிகவும் இயல்பாக நாகரீகமாக கருத்து போட்டிருந்தார்.

தேவையில்லாத கமெண்டுகள்

தேவையில்லாத கமெண்டுகள்

ஆனால் அதை எதிர்த்து பலர் தேவையில்லாத கமெண்டுகளுடன் குவிந்து விட்டனர். பலர் இஸ்லாம் மதத்தை கிண்டலடித்தும், விமர்சித்தும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். அவற்றுக்கும் கூட ஆசிப் கான் மிகுந்த நிதானமாக பதிலளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் விளக்கம் அளித்தாலும் புரியப் போவதில்லை என்று முடிவு செய்து அவர் போய் விட்டார்.

விளையாட்டுதானே

விளையாட்டுதானே

ஒரு விளையாட்டை விளையாடியதற்காக புகைப்படம் போட்டு அதனால் வந்து குவிந்த கமெண்டுகளைப் பார்த்து நிச்சயம் கைப் அசந்துதான் போயிருப்பார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mohammad Kaif posted a picture with his son playing Chess and got trolled by netizens in his FB page.
Please Wait while comments are loading...