ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் நான்காவதாக உள்ள ஷியுகியை சந்தித்தார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-10 மற்றும் 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

Kidambi Srikanth enters Australian Open badminton final

இதன்மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக சூப்பர் சீரிஸ் தொடரில் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்ரீகாந்த். முன்னதாக, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2வது இடத்தையும், இந்தோனேஷியா ஓபனில் பட்டம் வென்றவர் ஸ்ரீகாந்த். இவ்வாறு ஹாட்ரிக் முறையில் பைனலுக்குள் சென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் இவர்தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A resounding 21-10, 21-14 win for Kidambi Srikanth takes him into AustraliaSS FINAL. He's making it a habit. What an enthralling victory!
Please Wait while comments are loading...