காலர் வைத்த பனியன் போட்டுத்தான் விளையாடனுமாம்.. கோல்ஃப் வீராங்கனைகளுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோல்ஃப் விளையாட்டு வீராங்கனைகளுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் வெளியிட்டுள்ளது.

உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இந்நிலையில் கோல்ஃப் விளையாட்டு வீராங்கனைகளுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் அறிவித்துள்ளது.

LPGA accused of slut shaming after introducing a new dress code

அதன்படி, வழக்கமான காலர் வைத்த பனியன், பிளங்கிங் நெக்லைன்ஸ், ஸ்கார்ட் அல்லது ஷார்ட்ஸ் இல்லாத லெக்கிங்ஸ் ஆகிய ஆடைகளை கோல்ஃப் விளையாட்டின்போது வீராங்கனைகள் அணியக் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும் நீளமான ஸ்கர்ட், ஸ்கார்ட் மற்றும் ஷார்ட்ஸ் கீழ் பகுதி தெரியாத அளவிற்கு போதிய நீளம் இருக்க வேண்டும். போட்டிகள் தொடர்பான பார்ட்டிகளில் பங்கேற்கும்போது இந்த ஆடைகள்தான் அணிய வேண்டும். தொழில்முறையான படத்திற்கு தங்களுடைய விளையாட்டின் ஆடைகளைத்தான் அணிய வேண்டும். இல்லையெனில், ஜீன்ஸ் அணியலாம், ஆனால், ஓட்டைகள் உள்ள ஜீன்ஸ் அணியக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

Republic Day Parade at Rajpath, Watch Full dress rehearsal |Oneindia News

இன்று முதல் இந்த ஆடைக்கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் மீறினால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை விதிமுறைகளை மீறினால் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Ladies Professional Golf Association (LPGA) has been accused of “slut-shaming” female players after introducing a new dress code that forbids plunging necklines, leggings or revealing skirts on the course.
Please Wait while comments are loading...