சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 10 அணிகள் இடம்பெற்றுள்ளது.

5வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சி, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மொஹாலி மைதானங்களில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 6ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய அணிகள்

இந்திய அணிகள்

இதில் ஐ.பி.எல். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய இந்திய அணிகள் விளையாடுகின்றன.

ஆஸி. அணிகள்

ஆஸி. அணிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதர அணிகள்

இதர அணிகள்

தென்னாப்பிரிக்காவின் டைட்டன்ஸ், லயன்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆகிய அணிகளுடன் நியூசிலாந்தை சேர்ந்த ஒட்டாகோ வோல்ட்ஸ் அணியும் விளையாடுகிறது.

ஏ பிரிவில்..

ஏ பிரிவில்..

‘ஏ' பிரிவில் லயன்ஸ், மும்பை, ஒட்டாகோ, பெர்த், ராஜஸ்தான் அணிகள் உள்ளன.

ஏ பிரிவில்..

ஏ பிரிவில்..

‘பி' பிரிவில் பிரிஸ்பேன், சென்னை, ஹைதராபாத், டைட்டன்ஸ், டிரினிடாட் ஆகிய அணிகள் உள்ளன.

போட்டி எப்படி?

போட்டி எப்படி?

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

ராஜஸ்தான் - மும்பை மோதல்

ராஜஸ்தான் - மும்பை மோதல்

தொடக்க நாளான இன்று டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான ஐ.பி.எல். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

மும்பை எப்படி?

மும்பை எப்படி?

மும்பை அணியில் மலிங்கா விளையாடவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மிட்செல் ஜான்சன், பொல்லார்ட், ஹர்பஜன்சிங், பிரக்யான் ஓஜா, கிளைன்மேக்ஸ்வெல், வெய்ன் சுமித் ஆகியோர் அணிக்கு பலம்.

ராஜஸ்தான் அணியில்..

ராஜஸ்தான் அணியில்..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா, சித்தார்த் திரிவேதி ஆகியோர் பிக்சிங்கில் சிக்கி வெளியேறிவிட்டனர். இந்த அணி இப்போது ஷேன் வாட்சனை அதிகம் நம்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both Rajasthan Royals and Mumbai Indians have a lot to play for when they face off in the Champions League Twenty20 opener on Saturday.
Please Wait while comments are loading...