For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

19 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை வென்ற 14 வயது மாணவி.. யாரென்று தெரிகிறதா!

By Staff

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த, 26வது கிருஷ்ண கைதான் ஆல் இந்தியா ஜூனியர் ரேங்கிங் பாட்மின்டன் போட்டியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், 14 வயது காயத்ரி பட்டம் வென்றார்.

இந்தப் போட்டிகளில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த இந்தக் குட்டிப் பெண் யார் என்ற தெரிந்தபோதுதான், அவருடைய திறமைக்கான காரணம் அனைவருக்கும் புரிந்தது

New champ Gayathri


தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள், தாய் மற்றும் தந்தை 16 அடி பாய்ந்தால்… அதுதான் காய்த்ரி.

முதல் முறையாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ள காய்த்ரியின் தாய் பி.வி.வி. லட்சுமி. 1991ல் சென்னையில் நடந்த இதே போட்டியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பட்டம் வென்றவர் லட்சுமி.

1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர் லட்சுமி. கணவன் புல்லேலா கோபிசந்துடன் இணைந்து இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார்.

சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்து, பிரனாய் என, சர்வதேச வீரர்களை உருவாக்கி வரும் கோபிசந்த், லட்சுமியின் மகள்தான் காயத்ரி. இந்தப் போட்டிக்கான தரவரிசையில் இடம்பெறாத காயத்ரி, பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

காயத்ரியுடன், அவருடைய தம்பி சாய் விஷ்ணுவும் பாட்மின்டனில் கலக்கி வருகிறார். 13 வயதான சாய் விஷ்ணு, 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 15 வயதுக்குட்பட்டோருக்காக ஜெய்ப்பூர், கோவா, திருப்பூரில் நடந்த போட்டிகளில் பட்டம் வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
Story first published: Monday, November 20, 2017, 17:36 [IST]
Other articles published on Nov 20, 2017
English summary
Shuttle coach Gopichand daughter shines
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X