காதல்... ஸ்பெயினின் கவர்ச்சி வக்கீலிடம் "வாய் தா" கேட்கிறாரா நெய்மார்...??

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: பிரேசில் கால்பந்து இளவரசன் நெய்மார் மீண்டும் ஒரு காதலில் விழுந்துள்ளாராம். இந்த முறை தன்னை விட வயது அதிகமான இளம் பெண் வக்கீலிடம் மயங்கிக் கிடக்கிறாராம் நெய்மார்.

பிரேசிலின் லேட்டஸ்ட் கால்பந்து சூப்பர் ஸ்டார் நெய்மார். கடந்த உலககக் கோப்பைப் போட்டியில் இவரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பாதியிலேயே காயமடைந்து வெளியேறி விட்டார் நெய்மார்.

கால்பந்தில் மட்டுமல்ல, காதலிலும் கூட சூப்பர் ஸ்டாராக, காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நெய்மார். இப்போது ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வக்கீலிடம் மயங்கிக் கிடப்பதாக பார்சிலோனா மற்றும் பிரேசிலிலிருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அவருக்கு 26.. இவருக்கு 22

அவருக்கு 26.. இவருக்கு 22

அந்த வக்கீலின் பெயர் எலிசபெத் மார்ட்டினஸ். இவருக்கு 26 வயதாகிறது. நெய்மாருக்கு 22 வயதுதான்.

வயசு சாஸ்திதான்

வயசு சாஸ்திதான்

நான்கு வயது நெய்மாரை விட மூத்தவர் மார்ட்டினஸ். காதலுக்கு வயது முக்கயமில்லை என்று கூறி இருவரும் கை கோர்த்து சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

எல்லாத்துக்கும் காரணம் அந்த பேஸ்புக்தான்

எல்லாத்துக்கும் காரணம் அந்த பேஸ்புக்தான்

இப்போதெல்லாம் பெரும்பாலான காதல்கள் பேஸ்புக்கில்தான் நிச்சயமாகின்றன என்ற சம்பிரதாயத்திற்கு ஏற்ப இவர்களுக்கு இடையிலான காதலும் கூட பேஸ்புக்கில்தான் ஆரம்பித்ததாம்.

பார்சிலோனாவில்

பார்சிலோனாவில்

தற்போது இந்த ஜோடி அடிக்கடி பார்சிலோனா நகரை சுற்றிப் பார்த்துக் காதல் வளர்த்து வருகிறதாம்.

அங்க போனா பார்க்கலாம் பாஸ்

அங்க போனா பார்க்கலாம் பாஸ்

அதிலும் போகா கிராண்டே ஹோட்டலுக்குத்தான் அடிக்கடி வருகிறார்களாம். அதேபோல ஓபியம் நைட் கிளப், சுட்டன் நைட் கிளப்பிலும் இவர்களைப் பார்க்கலாமாம்.

பெரிய கோடீஸ்வரியாமே!

பெரிய கோடீஸ்வரியாமே!

மார்ட்டினஸ் பெரிய கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவராம். வக்கீல் தொழில் அவருக்கு ஹாபி போலவாம். கடந்த 2 வருடமாக அவர் வக்கீலாக பணியாற்றி வருகிறாராம்.

அவருக்கு முன்பு இவர்தான் எல்லாமே

அவருக்கு முன்பு இவர்தான் எல்லாமே

மார்ட்டினஸுக்கு முன்பு புரூனா மார்குஸைன் என்ற 22 வயது இளம் பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார் நெய்மார். அவரை விட்ட பிறகுதான் மார்ட்டினஸிடம் வந்துள்ளாராம்.

கணக்கே கிடையாது

கணக்கே கிடையாது

நெய்மார் காதலித்த பெண்களின் லிஸ்ட் மிகப் பெரியது. மருத்துவ மாணவி கமீலா கரம், பிளேபாய் மாடல் அழகி பாட்ரிசியா ஜோர்டான், சர்பிய மாடல் அழகி சாஷா வுசலிக் என இது பெரியது.

அதெல்லாம் கப்சா.. மறுக்கிறார் நெய்மார்

அதெல்லாம் கப்சா.. மறுக்கிறார் நெய்மார்

வழக்கம் போல தற்போதைய காதலையும் அவர் மறுத்துள்ளார். இதெல்லாம் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை.

சிரிப்பு சிரிப்பா வருதாம்!

சிரிப்பு சிரிப்பா வருதாம்!

மீடியாக்களில் வரும் செய்திகளைப் பார்த்தால் நான் தினசரி 10 பெண்களுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது என்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neymar's love life continues to make international headlines, and it is back on the limelight again. The Barca star is reportedly dating a lawyer from Barcelona who is four years his senior. According to a report by Spanish news outlet El Mundo, Neymar's new love interest is 26-year-old lawyer Elisabeth Martinez. The report said that their romance started with a little flirtation on social networking sites that went on for weeks. Neymar and Martinez were often spotted in several establishments in Barcelona City, such as the Boca Grande restaurant, Opium night club and Sutton night club.
Please Wait while comments are loading...