சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாம்பியன் ஆனார் இந்திய வீரர் சாய் பிரணீத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், சக வீரரான கிடம்பி ஸ்ரீகாந்த்தை எதிர் கொண்டார். இரண்டு இந்திய வீரர்களும் நேருக்கு நேர் மோதியதால் போட்டியில் பரபரப்பு காணப்பட்டது.

Praneeth won Super Series title at Singapore Open

இதில் முதல் சுற்றை ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்புடன் ஆடிய சாய் பிரணீத் 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

இதன்மூலம் சாய் பிரணீத், சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒன்றறையருக்கான பட்டத்தைக் கைப்பற்றினார். சாய் பிரணீத் பெறும் முதல் சிங்கப்பூர் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Praneeth won Super Series title at Singapore Open. This is his maiden title in Singapore open.
Please Wait while comments are loading...