5 மாத கர்ப்பம்... 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசத்தினார் அலிசியா மொன்டானோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தினார்.

சாதனை என்று வந்துவிட்டால் நம் உடல்நலன் குறித்து மறந்துவிடும். பிறந்தோம் , வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும். அப்போதுதான் பிறந்ததில் அர்த்தம் உண்டு என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டனர். மனம் உறுதி இருந்தால் போதும் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதை நாம் எத்தனையோ விஷயங்களில் கண்கூடாக பார்த்துள்ளோம்.

 அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யுஎஸ்ஏ டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அலிசியா மொன்டானோ கலந்து கொள்ள வந்திருந்தார்.

 ஆச்சரியம்

ஆச்சரியம்

இவரை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம், 5 மாத கர்ப்பிணியாக உள்ளாரே இவர் எப்படி தடகள போட்டியில் என்று திகைப்புடன் பார்த்தனர். போட்டியும் தொடங்கியது. அலிசியாவோ தன் ஓட்டத்தை தொடங்கினார்.

 கடும் வெயில்

கடும் வெயில்

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அலிசியா சிட்டாக பறந்தார். ஆனால் பார்ப்பவர்களுக்குத்தான் வயிற்றில் குழந்தை உள்ளதே தவறி விழுந்தால் என்னவாவது என்று பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

 கவலையே இல்லை

கவலையே இல்லை

ஆனால் அலிசியாவோ தன் வயிற்றில் 5 மாதக் குழந்தை இருப்பது குறித்தும் எவ்வித கவலையும்படாமல் சிட்டு போல் பறந்தார். அவர் 800 மீட்டர் தூரத்தை விரைவாக கடந்தார். இதை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 31 வயதாகும் இவரால் முதல் இடத்திற்கு வர முடியவில்லை.

 19 வினாடிகள் மட்டுமே...

19 வினாடிகள் மட்டுமே...

800 மீட்டர் தூரத்தை கடக்க இவருக்கு 2 நிமிடம் 21.40 நொடிகளில் கடந்தார். முதல் இடத்தை பிடித்த வீராங்கனையை விட 19 வினாடிகள் மட்டுமே காலதாமதமாகும். இவர் கர்ப்பிணியாக ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு மொனாக இவரது முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதும் அவர் இதுபோன்று ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டார்.

 8 மாத கர்ப்பிணி

8 மாத கர்ப்பிணி

அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 5 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற அலிசியா, 2 நிமிடங்கள் 32.13 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இது கடந்த 2010-ஆம் ஆண்டு மொனாகோவில்னா நடைபெற்ற போட்டியில் அவர் இயல்பாக இருக்கும் போது கடந்த நேரத்தைவிட 35 வினாடிகள் குறைவாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirty-four weeks pregnant, or nearly eight months, Montano ran the 800 meters Thursday in the U.S. track and field championships.
Please Wait while comments are loading...