புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் டபாங் டெல்லியிடம் படு தோல்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதரபாத்: 5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 2-ஆவது நாளில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டபாங் டெல்லி அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை படுதோல்வியடைய செய்துள்ளது.

ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் ஜெய்ப்பூர் வீரரை பிடித்ததன் மூலம் ஆட்டத்தின் முதல் புள்ளியைப் பெற்றது டெல்லி அணி. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு போனஸ் புள்ளியைப் பெற்ற டெல்லி அணி 2-0 என முன்னிலை பெற்றது.

 Pro Kabaddi League 2017: Dabang Delhi won Jaipur Pink Panthers

இதையடுத்து 4-ஆவது நிமிடத்தில் கேப்டன் மஞ்ஜீத் சில்லாரின் டேக்கிள் மூலம் முதல் புள்ளியைப் பெற்ற ஜெய்ப்பூர் அணி, பின்னர் அபாரமாக ஆடியது. இதனால் முதல் 10 நிமிடங்களில் ஜெய்ப்பூர் அணி 7-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் அணி, 11-ஆவது நிமிடத்தில் டெல்லி அணியை ஆல்அவுட்டாக்கியதன் மூலம் 11-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 16-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணியே வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் டெல்லி அணிக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த டெல்லி அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dabang Delhi won Jaipur Pink Panthers in Pro Kabaddi League 2017.
Please Wait while comments are loading...