For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளம்பர வருவாயில் டோணியை முந்திய பி.வி.சிந்து.. கோஹ்லியை நெருங்கி அசத்தல்

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளே கோலோச்சிய விளம்பர துறையில் பெண்கள் பேட்மிண்டன் துறையிலிருந்து சிந்து புகழ் பெற்றுள்ளது கவனிக்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

By Veera Kumar

டெல்லி: விளம்பர வருவாயை பொறுத்தளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியை விடவும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முன்னிலை பெற்றுள்ளார்.

ஆண்கள் ஆதிக்கம் கொண்ட இந்திய விளையாட்டு துறையில், கிரிக்கெட்டை தாண்டி ஒரு துறையில், பெண்மணியாக இருந்து கொண்டு சிந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளி பதக்கத்தை வென்ற பிறகு சிந்து மீதான மதிப்பு விளம்பரதாரர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

 கோஹ்லி பக்கம்

கோஹ்லி பக்கம்

தற்போது இந்திய விளையாட்டுத்துறை பிரபலங்களில் கோஹ்லி நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.2 கோடி சம்பாதித்து வருகிறார். இந்த சாதனையின் மிக அருகாமைக்கு சென்றுள்ளார் சிந்து.

 ரூ.1 கோடிக்கு மேல்

ரூ.1 கோடிக்கு மேல்

21 வயதாகும் சிந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1 முதல் 1.25 கோடி வரை சம்பாத்தியம் செய்கிறார். டோணி தனது உச்சபட்ச நிலையில் இருந்தபோது பெற்றதைவிட இது அதிக ஊதியமாகும்.

 திடீர் உயர்வு

திடீர் உயர்வு

ஒலிம்பிக்கில் சில்வர் மெடல் வாங்கும்வரை சிந்துவின் விளம்பர மார்க்கெட் ரேட், ரூ.15-25 லட்சமாக இருந்தது. ஆனால், வெள்ளி பதக்கம் பெற்றதுமே விளம்பர வருவாய் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடந்த 5 மாதங்களில் சிந்து ரூ.30 கோடி அளவுக்கு விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

 மாற்றம், முன்னேற்றம்

மாற்றம், முன்னேற்றம்

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளே கோலோச்சிய விளம்பர துறையில் பெண்கள் பேட்மிண்டன் துறையிலிருந்து சிந்து புகழ் பெற்றுள்ளது கவனிக்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 7, 2017, 10:44 [IST]
Other articles published on Mar 7, 2017
English summary
In a male-dominated cricketing nation starved of broader sporting success, PV Sindhu stands out both for her choice of sport and victories on the world stage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X