கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்- சியோலில் சரித்திரம் படைத்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சியோல்: கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் பெற்றார். இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார்.

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரைஇறுதியில் நுழைந்தார்.

PVSindhu crowned Korea SS champion

அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாராவை எதிர்கொண்டார் சிந்து.

உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார். இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் சிந்துவின் ஆட்டத்தின் அனல் பறந்தது.

ஓகுகாராவை 22-20,11-21,21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து. இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PV Sindhu defeats Japan's Nozomi Okuhara, clinches Korea Super Series title.
Please Wait while comments are loading...