For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அழகு ராணி' பொச்சார்ட் விம்பிள்டன் கனவு தகர்ந்தது.. அதிரடி க்விட்டோவா சாம்பியன் ஆனார்!

லண்டன்: ஒற்றையர் மகளிர் விம்பிள்டன் இறுதிப் போட்டியில், செக் நாட்டின் பெட்ரா க்விட்டோவா அதிரடியாக ஆடி கனடாவின் யூஜெனி பொச்சார்டின் கனவைக் கலைத்து விட்டார்.

மிகப் பிரமாதமாக ஆடிய க்விட்டோவோ, மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் பொச்சார்டை வீழ்த்தி விட்டார்.

மிகக் குறுகிய காலத்திற்குள் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 முறை விம்பிள்டன் பட்டத்தையும் வென்று இவர் அசத்தியுள்ளார். 1983ம் ஆண்டுக்குப் பிறகு குறுகிய காலத்தில் 2 முறை விம்பிள்டன் பட்டத்தை யாரும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2011ல் முதல் பட்டம்

2011ல் முதல் பட்டம்

2011ம் ஆண்டு க்விட்டோவா தனது முதல் பட்டத்தை வென்றிருந்தார். இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் இவர் வெறும் 55 நிமிடங்களில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றார்.

அதிரிச்சியில் பொச்சார்ட்

அதிரிச்சியில் பொச்சார்ட்

க்விட்டோவின் அனல் பறந்த ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் பொச்சார்ட் நிலை குலைந்து போனார். அவரால் 2வது செட்டில் மீளவே முடியாமல் போனது.

3 ஆண்டு காத்திருப்பு

3 ஆண்டு காத்திருப்பு

2011க்குப் பிறகு எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கும் முன்னேற முடியாமல் தவித்து வந்தவர் க்விட்டோவா. இந்த நிலையில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பொச்சார்டை வீழ்த்தி விட்டார்.

12வது பட்டம்

12வது பட்டம்

இது க்விட்டோவாவின் டென்னிஸ் வாழ்க்கையில் 12வது பட்டமாகும்.

2வது அதி வேக ஆட்டம்

2வது அதி வேக ஆட்டம்

இதற்கு முன்பு 31 ஆண்டுகளுக்கு முன்பு செக் நாட்டின் மார்ட்டினா நவ்ரத்திலோவா ஆண்ட்ரியா ஜேகரை 54 நிமிடங்களில் வென்றதே மிக வேகமான ஆட்டமாக இருந்தது. தற்போது 2வது அதி வேக ஆட்டமாக க்விட்டோவா- பொச்சார்ட் ஆட்டம் அமைந்துள்ளது.

பொச்சார்டின் முதல் தோல்வி

பொச்சார்டின் முதல் தோல்வி

மறுபக்கம் தனது முதல் கிராணட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பொச்சார்ட், இந்த தோல்வியால் பெரும் ஏமாற்றமடைந்தார்.

அழகு ராணியின் வாட்டம்

அழகு ராணியின் வாட்டம்

மரியா ஷரபோவாவுக்கு அடுத்து மிகவும் கவர்ச்சியான, அழகான ஆட்டக்காரர் என்று பலரும் பொச்சார்டை வர்ணித்து வந்தனர். இந்தப் போட்டியில் மட்டும் அவர் வென்றிருந்தால், அழகு ராணிகள் வரிசையில் அவர் மரியாவை பின்னுக்குத் தள்ளியிருக்கக் கூடும். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்து போய் விட்டது.

Story first published: Sunday, July 6, 2014, 14:32 [IST]
Other articles published on Jul 6, 2014
English summary
Petra Kvitova stormed to her second Wimbledon title in the shortest women's final since 1983 as the Czech sixth seed crushed Canada's Eugenie Bouchard 6-3, 6-0 on Saturday. Kvitova, who first won Wimbledon in 2011, took just 55 minutes to end her three-year wait for a second Grand Slam crown, leaving shell-shocked world number 13 Bouchard helpless to repel a brutal barrage of 28 winners and four aces on Centre Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X