விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை!

Written By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்திருக்கிறார்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிஸின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் எதிர்கொண்டனர்.

federer

விம்பிள்டனில் பெடரர் இதுவரை 11 முறை இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார். தொடக்கம் முதலே பெடரர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அடுத்தடுத்து 6-3ம், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அதிரடியாக செட்களை கைப்பற்றி விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் பெடரர். விம்பிள்டன் பட்டத்தை 8 முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துவிட்டார் ரோஜர் பெடரர்.

இதுவரை மொத்தம் 19 கிரான்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்குரியவராகி இருக்கிறார் ரோஜர் பெடரர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Switzerland's Roger Federer defeated Croatia's Marin Cilic by 6-3, 6-1, 6-4 in the final to lift record eighth Wimbledon Tennis Championship title on Sunday.
Please Wait while comments are loading...