For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!

By Mathi

கொல்கத்தா: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக அதிகமாக 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஒரே போட்டியில் 2வது முறையாக இரட்டை சதம் விளாசினார் ரோஹித் சர்மா.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Rohit Sharma registers record of highest inidividual score in ODIs

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானேவும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். 7.5வது ஓவரில் இந்திய அணி 40 ரன்களை எட்டிய நிலையில் இலங்கை வீரர் மேத்யூஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். ரஹானே 28 ரன்கள் எடுத்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா நிலைத்து நின்று வெளுத்துக் கட்டினார். அவருடன் விராத் கோஹ்லியும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா விறுவிறுவென இரட்டை சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் 2வது முறையாக அவர் இரட்டை சதத்தை எட்டினார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதத்தை எட்டியிருந்தார்.

தொடர்ந்தும் இலங்கை பந்துகளை வெளுத்து வாங்கி 219 ரன்களைக் கடந்து ஒருநாள் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் எட்டினார் ரோஹித் சர்மா. இதற்கு முன்னர் மற்றொரு இந்திய வீரர் சேவாக் 219 ரன்களைக் கடந்திருந்ததுதான் உலக சாதனையாக இருந்தது. சேவாக்குக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

Rohit Sharma registers record of highest inidividual score in ODIs

50வது ஓவரின் கடைசி பந்து வரை நிலைத்து ஆடி மொத்தம் 264 ரன்களைக் குவித்து ரோஹித் சர்மா வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். மொத்தம் 173 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 33 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் விளாசினார். குலசேகார வீசிய கடைசி ஓவர் கடைசி பந்தில் மகேளா ஜெயவர்த்தனவிடம் கேட்ச் கொடுத்தார் ரோஹித் சர்மா.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 404 ரன்களைக் குவித்து இலங்கை அணி வெல்ல 405 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

வெல்டன் ரோஹித்!

Story first published: Thursday, November 13, 2014, 19:44 [IST]
Other articles published on Nov 13, 2014
English summary
India batsman Rohit Sharma has become the first man to hit 250 in a one-day international. His 264 in the fourth ODI against Sri Lanka beat the previous world record of 219 made by fellow Indian Virender Sehwag against West Indies in 2011.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X