நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் அளித்த சாய்னா நேவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்தீஸ்கரில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ரூ.6 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்

கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜி கிராமத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 வீரர்கள் உயிர் இழந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Saina to donate Rs. 6 lakh to families of CRPF personnel killed in Sukma

இந்நிலையில் சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்குவதாக பேட்மிண்டன் சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சாய்னா நேவால் வழங்கும் நிதி உதவி 12 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 ஆயிரமாக பகிர்ந்து வழங்கப்படும்.

முன்னதாக நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த 12 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ1.8 கோடி நிதிஉதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saina Nehwal has decided to donate Rs 6 lakh to the families of 12 CRPF jawans who killed in sukma.
Please Wait while comments are loading...