ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியை தழுவி வெளியேறிவிட்டார்.

உலகின் முன்னாள் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த இந்தியாவின் சாய்னா நேவால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். மூன்றாவது முறையாக ஆஸி. ஓபன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருந்தார் சாய்னா.

Saina Nehwal out of Australian Open Super Series

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் சன் யுவை எதிர்த்து களமிறங்கினார் சாய்னா. 21-17 என்ற கணக்கில் முதல் கேமை இழந்தபோதிலும், வீறு கொண்டு எழுந்த சாய்னா, இரண்டாவது கேமை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து இரு வீராங்கனைகளும் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆக்ரோஷமாக மோதினர். இதில் சாய்னா 21-17 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை விட்டு சாய்னா வெளியேறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saina Nehwal out of Australian Open Super Series, loses to Sun Yu of China in the quarter finals.
Please Wait while comments are loading...