சிங்கத்தை அதன் குகையிலேயே பிடறியை பிடித்து உலுக்கிய ஸ்ரீகாந்த்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில், உள்ளூர் ஹீரோவும், உலக சாம்பியனுமான விக்டோர் ஆக்சல்சானை, பிடறியைப் பிடித்து உலக்கி எடுத்து, அரை இறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் பட்டங்கள் வெல்வதில், இந்திய வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு காலத்தில் பிரகாஷ் படுகோனோ, அதன் பிறகு, கோபிசந்த் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் இருந்தனர்.

தற்போது, மகளிர் பிரிவில் பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த்., எச்.எஸ். பிரனாய் என, மிக நீண்ட பட்டியல் போடும் அளவுக்கு வீரர்கள் உருவாகியுள்ளனர்.

நம்பிக்கை அளித்த வீரர்கள்

நம்பிக்கை அளித்த வீரர்கள்

அந்த வகையில் டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் களமிறங்கிய, பி.வி. சிந்து முதல் சுற்றில் வெளியேறினார். ஆனால், நாங்கள் இருக்கிறோம் என்று சாய்னா நெஹ்வால், பிரனாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் நம்பிக்கை அளித்தனர்.

 காலிறுதியில் சாய்னா தோல்வி

காலிறுதியில் சாய்னா தோல்வி

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில், சாய்னா நெஹ்வால், 21-10, 21-13 என்ற செட்களில், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யாமகூச்சியிடம் தோல்வியடைந்தார்.

 வாய்ப்பை இழந்தார் பிரனாய்

வாய்ப்பை இழந்தார் பிரனாய்

ஆடவர் காலிறுதி ஆட்டத்தில், எச்.எஸ். பிரனாய், உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள, கொரியாவின் சான் வான் ஹூவிடம் 21-13,.21-18 என்ற செட்களில் போராடி தோல்வியைடந்தார்.

ஏமாற்றாத ஸ்ரீகாந்த்

ஏமாற்றாத ஸ்ரீகாந்த்

ஆர்.கே. நகர் தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தலை அறிவிப்பார்கள், பண மழை எப்போது பெய்யும் என்று காத்திருக்கும் நேரத்தில், ரொம்பவும் காத்திருக்க வைக்காமல், உலக சாம்பியனை வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்தா, உசேன் போல்ட்டா

ஸ்ரீகாந்தா, உசேன் போல்ட்டா

முதல் செட்டில் 14-21 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தாலும், அடுத்த செட்டில் 22-20 என்று போராடி வென்றார். கடைசி செட்டில், ருத்ரதாண்டவம் ஆடி, 21-07 என்று வென்று, உள்ளூர் ஹீரோவுக்கு அதிர்ச்சி அளித்தார் ஸ்ரீகாந்த். விளையாடுவது ஸ்ரீகாந்தா, உசேன் போல்ட்டா என்று அவருடைய வேகத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் டென்மார்க் வீரர் திணறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srikanth moved to Semi, beating local hero
Please Wait while comments are loading...