ஆசிய தடகளம்: 3000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங்கிற்கு தங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய தடகளம் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார் .ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது

22-வது ஆசிய தடகளப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 நாடுகளின் 800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் 95 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

Sudha Singh bags India’s seventh gold at Asian Athletics

3-வது நாளான இன்று ஆசிய தடகளம் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார். இவர் பந்தய துாரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய தடகள போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்க பதக்கம் வென்று முதலிடத்தில் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sudha Singh clinched a gold in women's 3000m steeplechase event to swell India's medal tally on the third and penultimate day at the 22nd Asian Athletics Championships here today.
Please Wait while comments are loading...