கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன்... 3 அனல் பறக்கும் போட்டிகள்... இந்தியாவின் மறக்க முடியாத சண்டே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாக்கி, கிரிக்கெட், பேட்மிண்டன் என 3 முக்கிய விளையாட்டுகளில் இன்று இந்திய வீரர்கள் களமிறங்குவதால் இன்று மிக முக்கியமாக நாளாக அமைந்துள்ளது.

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் கோப்பை திருவிழா இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியைக் காண நாடு முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.

sports

கிரிக்கெட் ரசிகர்கள் பரீட்சைக்கு தயாராகும் போது இருக்கும் பதற்றத்தோடு போட்டி தொடங்கும் நேரத்திற்காக காத்திருக்கின்றனர். லண்டனில் நடைபெறும் இந்த இறுதிப் போட்யை தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, எச்டி உள்ளிட்ட சேனல்களில் பார்க்கலாம்.

கிரிக்கெட் போட்டி போல உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்றும் இன்று லண்டனில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்ப்டடு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா கனடா இடையே நடந்த போட்டியில் கனடாவை இந்திய அணி வீழ்த்தியது. இதனையடுத்து இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்யை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனலில் பார்க்கலாம்.

கிரிக்கெட், ஹாக்கி மட்டுமின்றி இந்தோனேஷிய பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டம் நடக்கிறது. ஜகர்தாவில் நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் 22வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரர் கசுமா சகாயை எதிர்கொள்கிறார். பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2வில் பார்த்து ரசிக்கலாம்.

கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட 3 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஜூன்18 விளையாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
June 18 turned as an important day for Indian sports as Cricket,badminton anh hockey players are in the finals and
Please Wait while comments are loading...