For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறுதி கட்டத்தில் விம்பிள்டன்..ஆண்டி முர்ரேவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ரோஜர் பெடரர்..

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் அறையிறுதியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் நகரில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசைப் ட்டியலில் 2 ஆம் நிலை வீரரும் 17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2013-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேயை எதிர்கொண்டார்.

roger federer

மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஆண்டி முர்ரேயை 7-5, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்.

முன்னதாக நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் 8 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 21-ம் நிலை வீரரான கேஸ்கியூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் பலமும், அனுபவமும் நிறைந்த ரோஜர் பெடரரும், ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

இதே போன்று விம்பிள்டன் மகளிர்இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த ஜோடி அரையிறுதியில் அமெரிக்க ஜோடிகளான ரகுவெல் கோப்ஸ்- ஜோன்ஸ்- அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-2, 6-2 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Saturday, July 11, 2015, 1:38 [IST]
Other articles published on Jul 11, 2015
English summary
Swiss cop Roger Federer beats Andy Murray, to face Novak Djokovic in Wimbledon final. In women doubles sania pair entered to Final
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X