தேசிய சீனியர் பாட்மின்டன் அரை இறுதியில் சிந்து, சாய்னா, கிடாம்பி ஸ்ரீகாந்த்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

மும்பை: சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டியின் அரை இறுதிக்கு, பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினர்.

82வது சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. இதன் அரை இறுதிக்கு உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறினர்.

Three S in semifinals

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, 21-11, 21-17 என்ற செட்களில் ஷ்ரியான்சி பர்தேசியை வென்றார். மற்றொரு கால் இறுதியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நெஹ்வால், 21-17, 21-10 என்ற செட்களில் ஆகர்ஷி கஷ்யபை வென்றார்.

ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரியஸ் பட்டம் வென்று, உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-17, 23-21 என்ற செட்களில் ஷுபாம் பிரஜாபதியை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய் ராஜ், அஸ்விணி பொன்னப்பா ஜோடி 21-14, 21-12 என்ற கணக்கில் ஷிவம் சர்மா, பூர்விஷா ராம் ஜோடியை வென்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sindhu, Saina, Srikanth in Semi finals of National Senior Badminton
Please Wait while comments are loading...