For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர், அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது அறிவிப்பு

விராட் கோஹ்லி மற்றும் அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ. விருது அறிவித்துள்ளது.

By Karthikeyan

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர் விருதும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.ஐ.சி. விருது கமிட்டி அறிவித்துள்ளது.

Virat Kohli chosen for Polly Umrigar award, R Ashwin to receive Dilip Sardesai award

இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோஹ்லி பெற உள்ளார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார். மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை அவர் இரண்டாவது முறையாக பெற உள்ளார்.

முன்னதாக, ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் கர்னர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் அணி கேப்டன சாந்தா ரங்கசாமி பி.சி.சி.ஐ. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Story first published: Wednesday, March 1, 2017, 22:15 [IST]
Other articles published on Mar 1, 2017
English summary
India skipper Virat Kohli, who has been on a roll with the willow, was on Wednesday (March 1) named for the prestigious Polly Umrigar award while all-rounder Ravichandran Ashwin will be presented the Dilip Sardesai award at the Board of Control for Cricket in India's (BCCI) annual awards on March 8 here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X