மனைவி "ம்ம்ம்"னு சொன்னா நான் ரெடி... ஓய்வு குறித்து ரோஜர் பெடரர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்விட்சர்லாந்து: டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வீரர் ரோஜர் பெடரர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரோஜர் பெடரர் (35). இவர் டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

Whenever my wife says, i will quit the tennis life, says Federer

டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் அவர் தன்னுடைய ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், என் மனைவி மிர்கா பெடரர் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக உள்ளார். அவர் இல்லையெனில் நான் இந்த அளவுக்கு சாதனை செய்திருக்க முடியாது.

எனவே என்னுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை என்று என் மனைவி கூறினால் அடுத்த நொடியே நான் டென்னிஸுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்றார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணமான பெடரர்-மிர்கா தம்பதிக்கு 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Roger Federer says that his wife is behind him in all the success, without her, he cannot touch this much height. So if she doesnot want me to play tennis, next second i will retire.
Please Wait while comments are loading...