For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"தங்கமகன்" பெல்ப்ஸ் உடலில் வட்ட வட்ட செந்தழும்புகள்... எப்படி வந்தது தெரியுமா?

By Mayura Akilan

ரியோ டி ஜெனிரே: ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் தற்போது 21 வது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 21 தங்கப்பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ள அமெரிக்காவின் தங்கமகன் பெல்ப்ஸ் உடலில் ஏன் சில வட்ட வடிவ தழும்புகள் காணப்படுகிறது என்ற கேள்வியை எழ வைத்துள்ளது.

பிரேசில், ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மீதுதான் அத்தனை பேர் கண்களும் உள்ளது.

வட்ட வட்ட தழுப்புகள்

வட்ட வட்ட தழுப்புகள்

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட் பெல்ப்ஸ் எல்லையை தொட்ட உடன் சந்தோசத்தில் நீச்சல் குளத்தை விட்டு எழுந்த போது இவரை அனைவரும் கவனித்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இவரின் உடலில் சிகப்பு நிறத்தில் வட்ட வடிவ தழும்புகள் காணப்பட்டது. இவரும் சீன முறையான கப்பிங் மருத்துவ முறையை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

காயத்தின் வலி போக்கும்

காயத்தின் வலி போக்கும்

உடலின் மீது சூடான கண்ணாடி குடுவையை வைப்பதால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் ஏற்பட்டுள்ள வலியையும், காயத்தையும் போக்குகின்றது. இதனால் பலரும் இந்த முறையை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.

சீனா கப்பிங் சிகிச்சை

சீனா கப்பிங் சிகிச்சை

பிரபல ஹாலிவுட் படமான ‘கராத்தே கிட்' படத்தின் இறுதி பகுதியில் படுகாயமடைந்த ஜேடேன் ஸ்மித்திற்கு 'கப்பிங்' (Cupping) எனப்படும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பார் ஜாக்கிச்சான். சூடாக்கப்பட்ட கண்ணாடி குடுவைகளை உடலின் மீது வைத்து செய்யப்படும் சிகிச்சையின் பெயரே 'கப்பிங்'.

பழங்கால மருத்துவம்

பழங்கால மருத்துவம்

மிக பழங்காலம் முதல் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிகிச்சை முறையை நவீன மருத்துவம் ஏற்காத போதும், உடல் வலி உள்ளிட்டவற்றிற்கு கப்பிங் மருத்துவ முறை சிறப்பான தீர்வு அளிப்பதாக கருதப்படுகிறது. இதனாலேயே, ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் சில விளையாட்டு வீரர்கள் 'கப்பிங்' செய்து கொள்கின்றனர்.

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள் விருது நிகழ்ச்சியின் போது சிவப்பு கம்பள வரவேற்புகளில் நடந்து வந்த போது அணிந்துவந்த குட்டை ஆடைகளின் காரணமாக அவர்களும் இத்தகைய சிகிச்சையை பெற்று வருவது தெரியவந்தது. அவர்களின் முதுகு புறங்களில் காணப்பட்ட வட்ட வடிவ சிவப்பு தழும்புகள் இதனை வெளிப்படுத்தின.

கப்பிங் செய்த பெல்ப்ஸ்

கப்பிங் செய்த பெல்ப்ஸ்

உடலின் மீது வைக்கப்படும் சூடான கண்ணாடி குடுவையானது தோலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தற்போதைய ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள உலக சாதனை நாயகன் பெல்ப்ஸ் உள்ளிட்டோரும் கப்பிங் செய்து கொண்டிருக்கிறார் என்பதையே உடலில் காணப்படும் வட்ட வடிவ தழும்புகள் காட்டுகின்றன.

Story first published: Wednesday, August 10, 2016, 12:36 [IST]
Other articles published on Aug 10, 2016
English summary
The American gold man Michael Phelps has those weird shoulder marks
 much of the attention turned to Michael Phelps's shoulders.Those marks are actually minor bruises from some ancient Chinese medicine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X