விம்பிள்டன் டென்னிஸ்.. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவும், அமெரிக்க வீராங்கனை வில்லியம்சும் இன்று பலப்பரீட்சை நடத்தினர். லண்டனில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்கியது. முதல் செட்டில் இருவரும் சமநிலை வகித்தனர்.

Wimbledon 2017 women's final: Muguruza won her first Wimbledon title

2-வது செட்டில் அதிரடி தாக்குதலை நடத்திய முகுருசா அந்த செட்டை அபாரமாக கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீனஸை முகுருசா வீழத்தினார்.

23 வயதாகும் முகுருசா இதற்கு முன் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முகுருசாவின் 2ஆவது வெற்றி இதுவாகும்.  முகுருசா உடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களில், வீனஸ் வில்லியம்ஸ் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Spain's Garbine Muguruza won her first Wimbledon title with a straight-set win over five-time champion Venus Williams.
Please Wait while comments are loading...