இலங்கை சிறையில் இருந்து 14 தமிழக மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 14 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது தலைமன்னார் நீதிமன்றம்.

அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரும், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

14 TN fishermen released from Sri lankan jail

அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வவுனியா சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் விடுவிக்க மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற மீனவர்களும், உறவினர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+