For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்!

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: தென்னாசியாவின் அறிவு களஞ்சியமான யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள காடையர்கள் இனவெறியால் எரித்த 39-வது ஆண்டு துயரநாள் இன்று.

தெற்காசியாவிலேயே ஆகச் சிறந்த நூலகமாக சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் என நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம்தான் யாழ்ப்பாணம் நூலகம். தென்னாசியாவின் அறிவு களஞ்சியமாக திகழ்ந்தது அது.

39 years on Remembering burning of the Jaffna Public Library

1933-ம் ஆண்டு மு. செல்லப்பாவால் தொடங்கப்பட்டு மெதுவாக உருவாக்கப்பட்டு தென்னாசியாவின் பிரமிக்கத்தக்க நூலகமாக வளர்ந்தது. 1959-ம் ஆண்டு நூலகமானது யாழ். மாநகர மேயர் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.

இத்தகைய அறிவுப் பொக்கிஷத்தை 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள காடையர்கள் தீயிட்டு எரித்தனர். 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவமும் மிக முக்கியமான ஒன்று.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட கொடூரத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் நெஞ்சுவலியால் துடிதுடித்து காலமானார். மொத்தம் 6,000 நூல்கள் எரிந்து போயின. 1672-ல் பிலிப்பஸ் பால்டியாரின் டச்சு ஆட்சியில் இலங்கை, 1660-ல் கண்டி மன்னர் சிறைவைத்த ராபர்ட் நோக்ஸ் எழுதிய இலங்கை பற்றிய நூல்களும் அழிந்தன.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனாதெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா

1585-ல் கத்தோலிக்க மதத்தின் தலைவர் எழுதிய நூல் ஒன்றும் எரிந்தது. 2003-ல் மீள் திறப்பு உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த நூலக எரிப்பு. இச்சம்பவம் தொடர்பாக ஏராளமான படைப்புகள், ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

2003-ம் ஆண்டு இந்த நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நூலகம் எரிப்பின் 39-வது ஆண்டு நினைவு நாள் உலகத் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது.

English summary
World Tamils remebered 39 years on burning of the Jaffna Public Library.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X