For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்.. மகனுக்காக கதறிய தாய் மயக்கம்

இலங்கையில் காணாமல் போன மகனை மீட்டுத் தர கோரி தாய் ஒருவர் கதறி அழுது மயங்கினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தை, பெண்கள் என்றும் பாராமல் அவர்களை கொடூரமாக கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.

500th day protest in Srilankans Kilinochi

இந்த சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் ஒரு படுகொலையின் போது இளைஞர் ஒருவர் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் இருந்து காணாமல் போய்விட்டார்.

அவரை கண்டுபிடித்து தரக் கோரி 500 நாட்களுக்கு மேல் அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கந்தசுவாமி கோயிலில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கிருந்த தாய் ஒருவர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் மயங்கிவிழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
500 th day road side protest in Kilinochi to retrieve back the son of the mother who missed in Srilankan assasination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X