For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 இந்தியர்கள் மாயம்.. 7-இல் இருவர் பலியை உறுதி செய்த இந்திய வெளியுறவு துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு - வீடியோ

    கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா சென்ற கர்நாடக மாநிலத்தவர்கள் 7 பேரில் 2 பேர் பலியாகிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர். அப்போது 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    கொழும்புவில் தேவாலயங்கள், ஓட்டல்களில் வைக்க குண்டுகளை வேனில் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அந்த வேனின் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

    இலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி இலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி

    பானுதரா பகுதி

    பானுதரா பகுதி

    இந்த நிலையில் கொழும்பு விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் 6 அடி நீள வெடிகுண்டு பைப் கண்டெடுக்கப்பட்டது. குண்டு வெடிக்கும் முன்பே கண்டறியப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிரவாதிகள் கொழும்புவின் புறநகர் பகுதியான பானுதரா பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    தேர்தல் பணி

    தேர்தல் பணி

    இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு கடந்த 20-ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் 7 பேரும் சாங்கிரி லா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

    5 பேர் நிலை

    5 பேர் நிலை

    இந்த நிலையில் சாங்கிரி லா ஹோட்டலிலும் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது. மீதமுள்ள 5 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.

    குமாரசாமி அதிர்ச்சி

    குமாரசாமி அதிர்ச்சி

    தேர்தல் பணிகளை ஆற்றிவிட்டு இலங்கை சென்ற 7 பேரில் இருவர் உயிரிழந்தது குறித்தும் 5 பேரின் நிலை என்னவென தெரியாதது குறித்தும் தகவலறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். கர்நாடக மஜதவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    7 Indians belongs to Karnataka state are missing after Srilanka bomb blast. In the seven, 2 were killed in blast, says MEA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X